Brindha Sivakumar shares how karthi got emotional during her marriage


ஒரு குடும்பத்தின் அழகே அந்த வீட்டின் இளவரசிகள் தான். என்ன தான் மிக பெரிய சினிமா குடும்பம் என்றாலும் அந்த பாசம் விட்டுப் போய்விடுமா? அப்படி ஒரு அன்பான குடும்பத்தின் இளவரசியாக பிரிந்தவர் தான் பிருந்தா சிவகுமார். நடிகர் சிவகுமாரின் மகள், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் அன்பு சகோதரி தான் பிருந்தா சிவகுமார். இவரும் திரைத்துறையை சார்ந்தவர் தான். பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார். 
சமீபத்தில் கூட ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் ஆலியா பட்டுக்கு டப்பிங் பேசி இருந்தார் பிருந்தா சிவகுமார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய திருமணம் பற்றி  ஸ்வாரஸ்யமாக பேசி இருந்தார்.
 

“முதலில் எனக்கு ரொம்ப நாளா வீட்ல மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாலு ஐந்து வருஷமா பார்த்துகிட்டே இருந்தாங்க. நான் கல்யாணத்துக்கு அப்புறம் மெட்ராஸிலேயே இருக்கணும் என்பதுதான் அப்பாவோட ஆசை. அப்படி இல்லனா அதிகபட்சம் ஒரு அரை மணி நேரத்தில் பாத்துடனும் என்ற ஒரு கிரைடீரியா வைச்சு தான் மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தாங்க. 
அந்த சமயத்தில பெரிய அண்ணா வந்து ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால ட்ராவெலிங் பண்ணிட்டு இருந்தார். என்னோட கல்யாணம் டைம்லயும் பிஸியா இருந்தாங்க. கார்த்தி அண்ணா அப்போ தான் பருத்திவீரன் முடிச்ச டைம். அதனால அந்த சமயத்துல அவருக்கு கொஞ்சம் கேப் இருந்துது. அதனால் கார்த்தி அண்ணா தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறத நினச்சு ரொம்ப பீல் பண்றத எக்ஸ்பிரஸ் பண்ணாரு. நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே சண்டை போட்டுப்போம். மூணு பேருமே அப்படி தான். ஆனா ஒவ்வொரு டைம் பீரியட்ல ஒவ்வொருத்தரோட சண்டை போடுறது சேட்டை பண்ணறது எல்லாம் இருந்துது. ஆனா கல்யாணம் டைம்ல நான் கார்த்தி அண்ணாவோட அதிக நேரம் இருந்ததால என்னை மிஸ் பண்றதை அவர் ரொம்ப எக்ஸ்பிரஸ் பண்ணாரு. 
 

கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு போகும் போது கார்த்தி அண்ணா தான் ரொம்ப பீல் பண்ணி அழுதாரு. பெரிய அண்ணா வந்து கொஞ்சம் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாண வேலையில் எல்லாம் பிஸியா இருந்தாரு. அதனால் என்னை வழி அனுப்பும் போது கார்த்தி அண்ணா தான் என் கூட இருந்தாங்க. அதனால் அவங்க தான் ரொம்ப எமோஷனல் ஆனாங்க” என அந்த நேர்காணலில் நடிகர் கார்த்தி, தங்கையின் திருமணத்திற்கு பிறகு அதிகமாக எமோஷனலானது பற்றி பகிர்ந்து இருந்தார் பிருந்தா சிவகுமார். 
 

மேலும் காண

Source link