Blue Star Film Actor Ashok Selvan Shares His Experience About The Film | Blue Star Ashok Selvan: பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பீங்களா? வானத்துக்கு கீழ எல்லாம் சமம்

Blue Star Ashok Selvan: ”பிறப்பால் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்கள் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான்” என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் படம் ப்ளூ ஸ்டார் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் சாந்தனு இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் கீர்த்தி பாண்டியன், பிரித்வி ராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 
 
படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்திற்கு ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்த நிலையில், செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 
 
இந்த நிலையில் கடந்த 25ம் தேதி வெளியான ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது பேசிய அசோக் செல்வன், ”மக்களுக்கு பிடித்தால் தான் ஒரு படம் வெற்றிப்பெறும். சமூகத்துக்கு தேவையான ஒரு கதையாக ப்ளூ ஸ்டார் படம் இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி” என்றார். 

 
மேலும், “பிறப்பால் எல்லாரும் சமம் என்பதை நினைப்பவன். வானத்துக்கு கீழே இருக்கும் மரம், செடி, கொடி, மனிதன் எல்லாரும் ஒன்னு தான். பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்கள் இருக்க கூடாது என்று நினைப்பவன் நான்.  படத்தில் எனது நிறத்தை மாற்ற ரொம்ப கஷ்டப்பட்டோம். அரக்கோணம் மிகவும் வெப்பமான பகுதியாக இருந்தாலும், எனது நிறத்தைக் குறைக்க மெரினா மணலில் எண்ணெய் தடவிக் கொண்டு படுத்திருப்பேன். பின்னர், அரக்கோணத்தில் கிரவுண்டில் ஷூட் நடைபெற்றதால் தானாகவே எனது நிறம் கருமையாக மாறியது.

 
படத்தில் இயக்குநரின் அண்ணனை வைத்து தான் ரஞ்சித் என்ற எனது கேரக்டர் கொண்டு வரப்பட்டது. எனது ஹேர் ஸ்டைல், ஆடை, கிரிக்கெட் விளையாடும் ஸ்டைல் எல்லாமே இயக்குநரின் அண்ணனை வைத்து தான் எடுத்துள்ளோம்.  ப்ளூ ஸ்டார் படத்தில் இருக்கும் ஒவ்வொரு கேரக்டரும் கண்டிப்பாக மக்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை” எனக் கூறியுள்ளார். 
 

 

Source link