Bigg boss fame Abhishek Raja introduces his new girl friend on Valentines day


யூடியூப் மூலம் பிரபலமான பலரும் மிகவும் பரீட்சையமான செலிபிரிட்டிகளாக மாறி வருகிறார்கள். அந்த வகையில் அதிரடி விமர்சகராக யூடியூப் மூலம் அறியப்பட்டவர் அபிஷேக் ராஜா. சினிமா விமர்சனங்கள் கூறி வந்த அபிஷேக் ராஜா, கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஸ்டார்களை பேட்டி எடுத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்ற பிறகு அபிஷேக் ராஜா பப்ளிசிட்டி வேற லெவெலில் எகிறியது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று தன்னுடைய காதலியை சோசியல் மீடியா மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார் அபிஷேக் ராஜா.  
 

பிக் பாஸில் அபிஷேக் :
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அபிஷேக் ராஜா சக போட்டியாளர்களான நிரூப் மாற்று பிரியங்கா தேஷ்பாண்டே கூட்டாளியாக பயங்கரமான ஸ்டேட்டர்ஜியுடன் விளையாடினார். இவர் மற்றவர்களிடம் கடுமையாக பேசும் விதம் பிடிக்காதல் நாமினேட் செய்யப்பட்டு 21ம் நாள் வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து 63 நாட்கள் வரை தாக்குப் பிடித்து பின்னர் மீண்டும் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர் அபிஷேக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிக அளவில் பிரபலமானார்.
 
பாதியில் முடிந்த முதல் திருமணம் :
அபிஷேக் ராஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் தெரியவந்தது. காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிஷேக் ராஜாவின் திருமணம் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. விமர்சகராக இருந்த போதிலும் ஒரு சில திரைப்படங்களில் தலை காட்டி உள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் ஒரு துணை நடிகராக ஹீரோயின் ராஷி கண்ணாவின் நண்பராக நடித்திருப்பார். தற்போது இயக்குநராகவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார். ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ஸ்டார் டா’ என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

புதிய காதலி :
முதல் திருமணம் முறிந்து போன நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த அபிஷேக் ராஜா, காதலர் தினத்தை முன்னிட்டு இன்று தன்னுடைய புதிய காதலியின் புகைப்படத்தை சோசியல் மீடியா மூலம் அறிமுகப்படுத்தி குறிப்பு ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.   
“குறைபாடுள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கு நன்றி!விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி! ஹாப்பி பிப்ரவரி 14 ஸ்வாட்! 
பார்ட்டிக்கு பிறகு நான் ஏன் ஆதிபுருஷ் பிரபாஸ் போல இருக்கிறேன் என எனக்கு புரியவில்லை!” என பதிவிட்டுள்ளார். 
அபிஷேக் ராஜாவின் இந்த போஸ்டுக்கு பலர் லைக்ஸ் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் காண

Source link