Ayalaan: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி…பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”

அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான்

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் 7 வருட இடைவெளிக்குப் பின் அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அயலான் படம் திரையரங்கில் வெளியானது .

தமிழில் முதல் முதலாக ஏலியன் ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கும் அயலான் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் வி.எஃப் எக்ஸ் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளது என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது. குறைவான பொருட்செலவில் இவ்வளவு தரமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை உருவாக்கிய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அயலான் 2

அயலான் படம் நல்ல வெற்றிபெறும் பட்சத்தில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிருப்பதாக படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது உலகளவில் 50 கோடிக்கும் மேலாக படம் வசூல் செய்துள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்காக பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன.

SK’s First Sequel #Ayalaan2 ✌️ pic.twitter.com/y5sKUkAPKj

— Christopher Kanagaraj (@Chrissuccess) January 23, 2024

அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தங்களது நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளது. மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மட்டுமே முதற்கட்டமாக ரூ.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி நிலவும் பட்சத்தில் அது மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் ஃபாண்டம் நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

எஸ்.கே 21

தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Source link