அவதார் 3 படத்தின் பட்டைய கிளப்பும் முதல்நாள் வசூல்…

அவதார் 3 படத்தின் பட்டைய கிளப்பும் முதல்நாள் வசூல் தகவல் வெளியிகியுள்ளது.

உலக புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் தொடர்ச்சியை எடுத்து வருகிறார். முதல் பாகம் 2009ஆம் ஆண்டு வெளிவந்து, உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களை வேறு உலகத்திற்கு இழுத்துச் சென்றது.

இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த‍து. முதல் பாகத்தில் கதைக்கு முக்கியத்துவம் இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில், வழக்கமான கதையம்சம் இருந்த‍தால், ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தாலும், விசுவல் மூலம் ட்ரீட் கொடுத்தார்.

இந்த நிலையில், மூன்றாம் பாகம் எப்போது வரும்? எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம், உலக‍ புகழ்பெற்ற டைட்டானிக் படத்தை எடுத்து, புதியதோர் காதல் காவியத்தை உலகுக்கு அர்ப்பணித்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.

எதிர்பார்த்த‍து போலவே டிசம்பர் 19ஆம் தேதி, அவதார் படத்தின் மூன்றாம் பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஸ் என்ற படம் வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை படம் பெற்றதால், முதல்நாளிலேயே ஆயிரம் கோடி ரூபாயை வசூல் கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 20 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. படத்தின் பாக்ஸ்ஆபீஸ் தகவலை கேட்டு, இந்திய சினிமா துறையினர் மூக்கின்மேல் விரலை வைத்துள்ளனர்.