விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தங்கள் குழந்தைக்கு ‘அகாய்’ (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர்.
விருஷ்கா ஜோடி
கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலக ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடி தான். 2013ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்தது தொடங்கி, டேட்டிங், காதல் என சில ஆண்டுகள் மீடியா வெளிச்சத்தைக் கவர்ந்து காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2017ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது அனுஷ்கா கருவுற்றதை மகிழ்ச்சியுடன் கோலி அறிவித்த நிலையில், இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தைக்கு பெற்றோராகினார். தங்கள் குழந்தைக்கு இந்து கடவுளான துர்காவின் பெயரான ‘வாமிகா’வை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டினர்.
இரண்டாவது குழந்தை
இந்நிலையில், தற்போது தங்கள் பெண் குழந்தைக்கு 3 வயது நிரம்பியுள்ள நிலையில், விராட் – அனுஷ்கா தம்பதி ஆண் குழந்தைக்கு சமீபத்தில் பெற்றோராகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்த விராட் – அனுஷ்கா ஜோடி, தாங்கள் கடந்த பிப்.15ஆம் தேதி ஆண் குழந்தைக்கு பெற்றோரானதாகவும், அகாய் எனும் வாமிகாவின் குட்டித் தம்பியை வரவேற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர்.
அகாய் என்றால் என்ன?
இந்நிலையில் விராட் – அனுஷ்காவின் மகனின் வித்தியாசமான இந்தப் பெயருக்கான அர்த்தம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி அகாய் என்பது துருக்கியில் இருந்து தோன்றிய இந்தி வார்த்தை என்றும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் உடலை விட மேலானவன், அழிவில்லாதவன் என அர்த்தம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அகாய் என்றால் துருக்கியில் பிரகாசமான நிலா என்றும் பொருள்படுகிறது. இந்நிலையில் விராட் – அனுஷ்காவின் குழந்தைகள் பெயருக்கான அர்த்தம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் காண