Anna serial dance jodi dance gowri gopan to enter as new veeralakshmi new update | Anna serial : புது வீரா யார் தெரியுமா? சீரியல் வாய்ப்பை தட்டி சென்ற கௌரி


சின்னத்திரை சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்குள் அவர்கள் தீவிரமாக மூழ்கி விடுகிறார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் கூட மிகவும் வருத்தப்படுபவர்கள் ரசிகர்களே. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் ‘அண்ணா’. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ரோசரி, பூவிலங்கு மோகன், ஸ்ரீலதா சத்யா, சுனிதா, ப்ரீத்தா, ஹேமா சின்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
 

அண்ணன் தங்கை பாசம் :
அண்ணன் தங்கைகள் இடையே இருக்கும் அபரிதமான பாசத்தை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்   துவங்கியது முதல் வீரலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வி.ஜே தாரா. அவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ‘அண்ணா’ சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதில் வீரா கதாபாத்திரத்தில் நடிக்க தொகுப்பாளராகவும் விஜேவாகவும் பிரபலமாக இருந்த தர்ஷு சுந்தரம் நடித்து வந்தார். தற்போது அவரும் அண்ணா சீரியலில் இருந்து விலகுவதாக சோசியல் மீடியா மூலம் பதிவு ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அடுத்ததாக வீரா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற குழப்பமும் அதே சமயத்தில் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 
 

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ வின்னர் :
இந்த கேள்விக்கான பதிலை மிர்ச்சி செந்தில் நேற்று நடைபெற்ற ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ பைனல்ஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டிலை அக்ஷதா மற்றும் நவீன் ஜோடி கைப்பற்ற  முதல் ரன்னர் அப்பாக இப்ராஹிம் மற்றும் அக்ஷிதா ஜோடியும் இரண்டாவது ரன்னர் அப்பாக கௌரி கோபனும் விவேக்கும் தட்டி சென்றனர். 
புது வீரா யார்?
இறுதிச்சுற்றில் கலந்து கொண்ட மிர்ச்சி செந்தில் இனி ‘அண்ணா’ தொடரில் வீரா கதாபாத்திரத்தில் கௌரி கோபன் இணைய உள்ளார் என்ற அறிவிப்பை சர்ப்ரைஸாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக இருந்தது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட கௌரி ‘அண்ணா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார். ஒரு நடிகையாக வேண்டும் என்பதே கௌரியின் கனவாக இருந்துள்ளது. அதை ஜீ தொலைக்காட்சி நனவாக்கி உள்ளது. கௌரி அண்ணா சீரியலில் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் கௌரிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

மேலும் காண

Source link