செய்தி வாசிப்பாளர், நடிகை, விளம்பர மாடல், பிக்பாஸ் பிரபலம் என ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். அவர் தன்னுடையா தந்தையின் பிறந்தநாளுக்கு உருக்கமான போஸ்ட் ஒன்றை கடந்த ஆண்டு போஸ்ட் செய்து இருந்தார். அந்த பதிவையே தற்போது ரீபோஸ்ட் செய்து ஒரு நீண்ட குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.

அதே பதிவை ரீபோஸ்ட் செய்கிறேன். அதே பதிவை நான் மீண்டும் பதிவிடுவதற்கு காரணம் அதைவிட என்னுடைய மன ஓட்டத்தை மிக சரியாக என்னால் வேறு ஒரு பதிவு மூலம் எழுதி விட முடியாது. புகைப்படம் போட்டு வாழ்த்து சொல்ற அளவுக்கு மனசு இன்னும் திடப்படல. ஊருக்குப்போன இன்னும் நீ வரல, வந்துடுவே… இத தவிர வேற எதையும் சிந்திக்கல. எல்லா பிறந்தநாளுக்கும் பேனா வாங்கி தருவே. இந்த முறை பேனாவுக்கு கொடுத்து வைக்கல.

ஹேப்பி பர்த்டே டாடி !

எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து ஓடுவேன்! இந்த உலகம் என் பெயரை உச்சரிக்கும் வரை அனிதா சம்பத் என உன் பெயரையும் சேர்த்து தான் உச்சரிக்கும். உன் பெயரை நான் உள்ளவரை தாங்குவேன்!

"உலகத்தையே சுத்தி காட்டணும்னு நினைச்சு வந்தேன். இன்னும் அதை செய்ய முடியலை என்கிற ஃபீலிங்கோட தான் தினமும் வாழுறேன். இன்னும் போட்டோ போஸ்ட் பண்ணி விஷ் பண்ணவும், போட்டோவை எடுத்து பார்க்கவும் கூட மனசு திடப்படல. என்னைக்கும் அனிதா சம்பத் என உன் பெயரை என் பெயரோடு தாங்குவேன்.

ஹீரோவாக இருந்தாலும் அந்த ஹீரோக்களுக்கும் நாளுக்கு நாள் வயசு ஆகிக்கிட்டே போகும். முடிந்த அளவு இருக்கும்போதே நெனச்சதை எல்லாம் செஞ்சு கொண்டாடிடுங்க. இயர்லி ஹெல்த் செக்கப் எடுங்க. சின்னதா முடியலன்னு சொன்னாலும் லேட் பண்ணாம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுங்க. செலவு பாக்காம ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு வையுங்க.

வெளியூர் கூட்டிட்டு போங்க! முடிஞ்சா கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து பிளைட்ல கூட்டிட்டு போங்க!

அட்லீஸ்ட் இதெல்லாம் இருக்கும்போதே செஞ்சுட்டோம்னு மனச தேத்திக்கிற மரியாதையான விஷயங்களை பண்ணிடுங்க…

நமக்காக நிறைய கனவு காணுறது அவங்கதான். ஆனால் நிறைய பேருக்கு நம்ம அந்த நிலையை அடையும்போது அவங்க பார்க்க இருக்க மாட்டாங்க. எனக்கும் அப்படித்தான் ஆயிடுச்சு. பேரெண்ட்ஸ் கூட இருக்குற ஆசிர்வாதம் கெடச்சவங்க அவங்கள நல்லா வெச்சுக்கோங்க…" என குறிப்பு ஒன்றையும் அந்த பதிவுடன் சேர்த்து போஸ்ட் செய்துள்ளார் அனிதா சம்பத்.