வாம்மா துரையம்மா… ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் மூலம் மக்கள் மத்தியில் ஒரு துரையம்மாவாகவே இடம் பிடித்தவர் நடிகை எமி ஜாக்சன். ஹாலிவுட் நடிகையான இவரை ஏ.எல். விஜய் தன்னுடைய ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்திய எமி ஜாக்சனை தமிழ் சினிமா ஆரத்தழுவி வாய்ப்புகளை குவித்தது. முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து விக்ரமுடன் ஐ, விஜய்யுடன் தெறி, ரஜினிகாந்துடன் 2.0, தனுஷுடன் தங்க மகன், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கெத்து உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். ஒரு இடைவேளைக்கு பிறகு இந்த பொங்கலுக்கு வெளியான ‘மிஷன் சேப்டர் 1’ திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் மிக சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுகளை குவித்தார் எமி ஜாக்சன்.
தனது மகனுடன் வெளிநாட்டில் வசித்து வரும் எமி ஜாக்சன் தற்போது ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் டேட்டிங் செய்து வந்தார்கள். அவர்களுக்கு 2019ம் ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரிந்தனர்.
இந்நிலையில் மகன் ஆண்ட்ரியாஸ் உடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் அவ்வப்போது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளிவிடுவார். சமீப காலமாக ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங் செய்து வருகிறார் எமி ஜாக்சன். அவர்கள் இருவரும் போஸ்ட் செய்த புகைப்படங்களை பார்த்து இருவரும் காதலிக்கிறார்கள் என அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்ற இந்த ஜோடி மோதிரம் மாற்றி கொண்டு தங்களின் காதலை வெளிப்படுத்தினர். மேலும் இருவர் இடையேயும் நல்ல புரிதல் உள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற தகவலையும் தெரிவித்து இருந்தார் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட எமி ஜாக்சன், அவருடைய மகன் ஆண்ட்ரியாஸ் தங்களின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டான் என்பதை தெரிவித்து இருந்தார். சிறு வயது முதலே ஆண்டிரியாஸ், எட் வெஸ்ட்விக் உடன் மிகவும் நட்புடன் பழகி வந்தான். ஒரு முறை அவனே என்னிடம் வந்து, ஏன் இன்னும் நீங்கள் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்டான். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் கேட்டது மட்டுமில்லாமல், எட் வெஸ்ட்விக்கிடமும் சென்று ஏன் என்னுடைய மம்மியை நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்கப்போகிறேன் என சொல்லி ஷாக் கொடுத்தான்.
நிச்சயம் எட் வெஸ்ட்விக் என்னையும், ஆண்ட்ரியாஸையும் நன்றாக பார்த்து கொள்வார் என நம்புகிறோம் என தெரிவித்து இருந்தார் எமி ஜாக்சன்.
மேலும் காண