நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்துக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Good Bad Ugly
திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
With Wholesome Humbleness herewith, we Announce the title of AK’s Next Movie Called as #GoodBadUgly #AjithKumar @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl@SureshChandraa @supremesundar#kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren@Donechannel… pic.twitter.com/EU4qKO5fEO
— Mythri Movie Makers (@MythriOfficial) March 14, 2024
இந்த படத்துக்கு Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளதே பல விமர்சனங்களை கிளப்பிய நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படத்துக்கு ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இதனிடையே இந்த படத்துக்கான அஜித்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது துணிவு படத்துக்காக அவருக்கு ரூ.110 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதனால் கிட்டதட்ட ரூ.150 கோடிக்கும் மேல் அஜித்துக்கு Good Bad Ugly படத்துக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி கட்டத்தில் விடாமுயற்சி
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ் என பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் மற்றும் சென்னையில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் நடக்கவுள்ளது. அதற்கு முன்னால் அஜித் பைக்கில் உலக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பைக் பயண குழுவில் நடிகர் ஆரவ்வும் இடம் பெற்றுள்ளார்.
The Class by ….. Today#Ajithkumar pic.twitter.com/9P6dj3vFac
— Suresh Chandra (@SureshChandraa) March 20, 2024
குழுவினருடன் டீ குடிப்பது, அனைவருக்கும் பிரியாணி சமைப்பது, பைக் எப்படி ஓட்ட வேண்டும் என கற்றுக் கொடுப்பது என்று பலவிதமான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் காண