Ajith Kumar: குடும்பத்துடன் துபாயில் செட்டில்? ஒரு வருடத்திற்குள் இரண்டு வீடுகளை வாங்கிய அஜித்?

குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆக அஜித் திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது

அஜித் குமார்

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமாரின் அடுத்தப் படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேணி இயக்கும் விடாமுயற்சி படத்தின் டைட்டிலைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எந்த விதமான அப்டேட்டும் வெளியாகாத காரணத்திலான் ரசிகர்கள் மனவருத்தத்தில் இருந்தார்கள். தற்போது அவர்களை உற்சாகப்படுத்து வகையில் அமைந்துள்ளது ஏகே 63 படத்தின் அப்டேட். மார்க் ஆண்டனி படத்தின் மூலம் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்க் ’குட் , பேட் . அக்லி ‘ என்று க்ளிண்ட் ஈஸ்ட்வுட் படத்தின் டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.  வரும் ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

With Wholesome Humbleness herewith, we Announce the title of AK’s Next Movie Called as #GoodBadUgly #AjithKumar @Adhikravi @ThisIsDSP @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl@SureshChandraa @supremesundar#kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren@Donechannel… pic.twitter.com/EU4qKO5fEO

— Mythri Movie Makers (@MythriOfficial) March 14, 2024

துபாயில் வீடு வாங்கிய அஜித் குமார்

விடாமுயற்சி படத்தின் போது நடிகர் அஜித் குமார் துபாயின் புகழ்பெற்ற பாம் ஜுமேரா என்கிற இடத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகவல் வெளியானது. விடாமுயற்சி படத்தின் படப்பிற்கு அஜித் தனது சொந்த வீட்டில் இருந்து சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் அஜித் நீண்ட நாட்கள் துபாயில் இருந்த வந்ததற்கான காரணம் தெரியாமல் ரசிகர்களின் குழப்பன் இதன் மூலம் தெளிவாகியது.

இன்னொரு வீடா ?

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி அஜித் குமார் துபாயில் துபாய் மெரீனா என்கிற இடத்தில் பலகோடி ரூபாய் செலவில்  இரண்டாவது வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் பொது இடங்களில் , நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விரும்பாதவர் அஜித் குமார். குடும்பத்துடன் பொது இடங்களுக்குச் செல்வது குழந்தைகளுடன் விளையாடுவது என தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொள்கிறார்கள். இப்படியான சூழலைத் தவிர்க்க துபாயில் குடும்பத்துடன் செட்டில் ஆக அஜித் குமார் முடிவு செய்திருக்கலாம் என்றும் அதற்காகவே இந்த வீடுகளை அவர் வாங்கியிருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில்  கூறப்படுகிறது.

Source link