Aishwarya Rajinikhanth next movie direction actor sidharth sources may be ar rahman music


Aishwarya Rajinikhanth: இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, கேப்பிரியல்லா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
காதலையும், 3 பருவங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் இளம் வயதினரிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் ரிலீசான சமயத்தில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.  தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ’வை ராஜா வை’ படத்தை இயக்கினார்.
இதற்கு அடுத்து சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு  ‘லால் சலாம்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
சித்தார்த்துடன் கைகோர்கும் ஐஸ்வர்யா?
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து  அடுத்ததாக ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்  இயக்க உள்ள படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி, நடிகர் சித்தார்த்தை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் மீண்டும் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சித்தார்த்துடன் அவர் அடுத்ததாக இணையும் படம் அவரது இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகும்.  இந்த படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கூடிய விரையில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தன் சினிமா பயணத்தைத் தொடங்கி, ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் இன்று பிரபல நடிகராக சித்தார்த் வலம் வருகிறார். விடலை சிறுவனாக பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி, இன்று புரிதல் மேம்பட்ட நடிகராக வளர்ந்து நிற்கும் சித்தார்த்துக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சித்தார்த் நடிப்பில், சென்ற ஆண்டு வெளியான சித்தா, டக்கர் ஆகிய இரண்டு படங்களுமே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க
Soundarya Rajinkanth: “43 வருஷமா ரஜினி – லதா தம்பதி திருமண நாளில் இதை செய்யறாங்க” – மகள் சௌந்தர்யா நெகிழ்ச்சி!

மேலும் காண

Source link