actress nila aka meera chopra s j suryah movie actress got married Rakshit Kejriwal


Meera Chopra Marriage: இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தமிழில் அறிமுகப்படுத்திய நடிகை நிலா எனும் மீரா சோப்ராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

கோலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் முலம் 2005ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களைக் கவரந்தவர் மீரா சோப்ரா. தமிழ் சினிமாவில் நிலா எனும் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒரு அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து தடம்பதித்தார். 
குறிப்பாக தமிழில் லீ, மருதமலை, இசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மீரா சோப்ரா, பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார், இந்நிலையில் இவர் தன் நீண்ட நாள் காதலரும் தொழிலதிபருமான ரக்‌ஷித் கெஜ்ரிவாலை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ரக்‌ஷித்தை மீரா சோப்ரா நேற்று கரம்பிடித்தார்.  என்றென்றும் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் வாழ்நாள் முழுவதற்குமான நினைவுகள். ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடன்” என மீரா சோப்ரா உணர்வுப்பூர்வமான புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

டெல்லியைச் சேர்ந்தவரான மீரா சோப்ரா தன் 40ஆவது  வயதில் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண

Source link