இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கி, இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சித்தார்த். அதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
மலையாள திரைப்படம் மூலம் அறிமுகம் அதிதி ராவ், 2007ம் ஆண்டு வெளியான ஸ்ரீரங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக லவ் பர்ட்ஸ் போல சிறகடித்து பறந்து வந்தனர் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்ட்னர் என செல்லமாக கொஞ்சி கொள்வதும், எங்கு சென்றாலும் ஜோடியாக கலந்து கொள்வதும், டான்ஸ் ஆடி ரீல்ஸ், ஊரூராக டேட்டிங் செல்வதும் என ஜோடியாகவே காட்சி அளித்தனர்.
2021ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது டேட்டிங் வரை சென்றது. அன்று முதல் இருவரும் மிகவும் பிஸியாக டேட்டிங் செய்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது பீல் இருக்கா இல்லையா என்ற குழப்பத்திலேயே ரசிகர்களை அல்லாட வைத்தனர்.
இந்நிலையில் தான் சித்தார்த் மற்றும் அதிதி ராவ், தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் நேற்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என டோலிவுட் சினிமா வட்டாரம் தொடங்கி சமூக வலைத்தளம் எங்கும் அவர்கள் திருமணம் குறித்த தகவல் காட்டு தீயாய் பரவ துவங்கியது. இருவரும் நேற்று மாலை திருமண புகைப்படங்களுடன் திருமணம் முடிந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என மீடியா முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் எந்த ஒரு தகவலும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியாகாமல் மிகவும் சஸ்பென்சாகவே இருந்தது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிய துவங்கின.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஆம், அவர் ஓகே சொல்லிவிட்டார்” எனக் கூறி நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தினை சித்தார்த் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், நிச்சயம் முடிந்துள்ளதே தவிர திருமணம் முடியவில்லை என, இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கிறார்கள்.
மேலும் காண