Actor Sharwanand And His Wife Rakshita Blessed With Baby Girl Shares First Photo


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஷர்வானந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தன் மகளை அறிமுகம் செய்துள்ளார். 
ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஷர்வானந்த் 2004 ஆம் ஆண்டு ஐதோ தரீக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை பிடித்தார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு காதல்ன்னா சும்மா இல்ல என்ற படம் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். இதன் பின்னர் நாளை நமதே, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 

Leela Devi Myneni pic.twitter.com/QpczTppGro
— Sharwanand (@ImSharwanand) March 6, 2024

இதனிடையே ஷர்வானந்துக்கும் மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளுமான ரக்‌ஷிதா ரெட்டிக்கும் கடந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.ரக்‌ஷிதா அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்தார். இதனிடையே ஷர்வானந்த் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் மனமே, மற்றும் 36வது, 37 வது படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் ஆக அமைந்தது. 

Thank you everyone for the love and wishes. Saved the best news for last. Entering the new year with my biggest blessing by my side pic.twitter.com/KJY26q4lTV
— Sharwanand (@ImSharwanand) March 6, 2024

மேலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஷர்வானந்த் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் ஷர்வானந்த் – ரக்‌ஷிதா தம்பதியினர் தங்கள் குழந்தையினை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்த குழந்தைக்கு லீலா தேவி மைனேனி என பெயரிடப்பட்டுள்ளது. ஷர்வானந்த் தனது பதிவில், “பிறந்தநாளில் கிடைத்த அன்புக்கும் வாழ்த்துக்கும் அனைவருக்கும் நன்றி. கடைசியாக சிறந்த செய்தியாக என்னுடைய மிகப்பெரிய ஆசீர்வாதத்துடன் புதிய ஆண்டில் நுழைகிறேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Actress Lakshmi: கண்ணை மறைத்த காதல்.. ஹோட்டல் ரூமுக்கு அழைத்த லட்சுமி.. நடிகர் மோகன் ஷர்மா ஓபன் டாக்!

மேலும் காண

Source link