actor prashanth dance gathers attention in vijay the goat movie whistle podu song


விஜய் மற்றும் பிரபுதேவாக்கு ஈடுகொடுத்து பிரஷாந்த் இந்தப் பாடலைல் நடனமாடியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
விசில் போடு
விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 
விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தியதா யுவன் இசை?
’பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ‘ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. கடந்தாண்டு லியோ படத்தில் அனிருத் இசையில் வெளியான நான் ரெடிதான் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதே மாதிரியான ஒரு பாடலை ரசிகர்கள் யுவனிடமும் எதிர்பார்த்தார்கள். யுவனின் இசை விஜய் ரசிகர்களை எந்த அளவிற்கு  திருப்திபடுத்தியது என்பதை சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம். எல்லாவற்றையும் தாண்டி இந்தப் பாடலில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த பகுதி என்றால் கடைசி ஒரு நிமிடத்திற்கு விஜய் , பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரும் சேர்ந்து நடனமாடும் காட்சி.
ரசிகர்களை கவர்ந்த பிரசாந்த்
லியோ படத்தின் நான் ரெடிதான் பாடல் வீடியோவில் அர்ஜூன், மடோனா செபாஸ்டியன் மற்றும் விஜய் , மன்சூர் அலிகான் என எல்லாரும் சேர்ந்து நடனமாடி இருப்பார்கள் . ஆனால் விஜய்யைத் தவிர்த்து இந்தப் பாடலில் ஆடிய அனைவரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார்கள்.

The real surprise is Top Star Prashanth.The way he keeps up with Vijay and PD’s moves while still having a style of his own. Good to see.#TheGreatestOfAllTime pic.twitter.com/1hEu2Wx1hu
— Siddarth Srinivas (@sidhuwrites) April 14, 2024

தற்போது வெளியாகியுள்ள விசில் போடு பாடலில் பிரபு தேவா , விஜய் , மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரும் அவரவர் ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். பிரபுதேவா மற்றும் விஜய் ஆகிய இருவரின் காம்போவை போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த முறை இவர்கள் இருவரைக் காட்டிலும் ரசிகர்களை ஒரு படி அதிகம் கவர்ந்திருப்பது டாப்ஸ்டார் பிரசாந்த் தான்.
தமிழ் திரைரயுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலத்தில் பல படங்களில் சிறப்பாக நடன்மாடிக் காட்டியவர் பிரசாந்த். திரையில் அவர் நடன்மாடுவதைப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படியான நிலையில் விசில் போடு பாடலில் விஜய் மற்றும் பிரபுதேவா இருந்தும், அவர்களுடன் இணைந்து தனது வழக்கமான ஸ்டைலில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் பிரசாந்த். 

மேலும் காண

Source link