லொள்ளுசபா மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சி மூலம் தான் சேஷூ கலையுலக பயணத்தைத் தொடங்கினார். அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி தான் திருப்புமுனையாக அமைந்தது.
நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதிநடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்#வடக்குப்பட்டி_ராமசாமி படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.@GovindarajPro #Seshu pic.twitter.com/56rFvDi7mL
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 15, 2024
தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். இப்படியான நிலையில் சேஷூ விரைந்து குணமாக ரசிகர்கள் பிராத்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் காண