Actress Jyothika responds to a fan girs asking to buy actor suriya for one day


கணவர் சூர்யாவை நடிகை ஜோதிகா ஒரு நாளைக்கு கடனாக கொடுப்பாரா? என்று கேட்ட ரசிகைக்கு பதிலளித்துள்ளார் நடிகை ஜோதிகா. 
சூர்யா – ஜோதிகா ஜோடி:
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒன்று சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஜோடி. இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் நெருக்கமான நட்பு உருவாகியது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தில் நடித்தனர்.
காக்க காக்க படத்தை ஜோதிகா மற்றும் நக்மா இணைந்து தயாரிக்க இருந்ததாகவும் இந்தப் படத்திற்கு நாயகனாக சூர்யாவை ஜோதிகா தான் தன்னிடம் பரிந்துரை செய்ததாக இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் தெரிவித்தார். இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 
திருமணத்தில் எதிர்கொண்ட சவால்கள்
வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட இருவரும் தங்களது காதல் முதல் திருமண வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டும் இந்த தம்பதியினருக்கு தியா என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தேவ் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் விதமாக சில காலம் திரையை விட்டு ஒதுங்கி இருந்தார் ஜோதிகா.
சினிமாவில் கம்பேக் கொடுத்த ஜோதிகா
36 வயதினிலே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த ஜோதிகா தற்போது தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனமான 2டி வழியாக படங்களை தயாரித்தும் வருகிறார். ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் த்ரில்லர் வெப் சீரிஸ் ‘ டப்பா கார்டெல்’ விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. 
18 ஆண்டுகள் திருமன வாழ்க்கை
18 ஆண்டுகாலமாக திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து வரும் இந்த தம்பதியினர் இன்றும் புதுமண தம்பதிக்கு சவால் விடும் வகையில் உற்சாகமாக காதலித்து பயணம் செய்தும் வருகிறார்கள். சூர்யா மற்றும் ஜோதிகா இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபின்லாந்துக்கு சுற்றுலா பயனம் மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 
கடனா எல்லாம் தரமுடியாது

சூர்யாவின் ரசிகை ஒருவர் ஜோதிகாவின் பதிவில் தான் கடந்த 15 ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகை என்றும்  சில்லுனு ஒரு காதல் படத்தில் நீங்கள் ஐஸ்வர்யாவுக்கு உங்கள் கணவர் சூர்யாவை ஒரு நாள் கடன் கொடுப்பது மாதிரி எனக்கும் கடனாக தருவீர்களா என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு ஜோதிகாவும் விளையாட்டாக ”அதற்கெல்லாம் அனுமதி இல்லை”  ஒரு பதிலை ரிப்ளையாக கொடுத்துள்ளார். அவரது பாசிட்டிவான இந்த மனப்பான்மை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.  
 

மேலும் காண

Source link