குட்நைட் பட நாயகி மீதா ரகுநாத்துக்கு இன்று திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதலில் கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத் (Meetha Raghunath), தொடர்ந்து சென்ற ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்தார்.
குட் நைட் படத்தில் மணிகண்டனுக்கு இணையாக அழகான, எளிமையான நடிப்பை வெளிப்படுத்திய மீதா ரகுநாத், இப்படிப்பட்ட மனைவி வேண்டும் என இணையவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு பதிவிடும் வகையில், இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில், தொடர்ந்து சினிமாவில் வெற்றிகளைப் பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. ஊட்டியில் மீதாவின் சொந்த ஊரில் அவரது நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பெற்றோர் பார்த்து நிச்சயித்துள்ள மாப்பிள்ளையை மீதா திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மீதா ரகுநாத்தின் திருமணம் இன்று இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகமாக தற்போது நடைபெற்று முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தன் இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் தான் இணைந்திருக்கும் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு மீதா சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.
நெற்றியில் குங்குமத்துடன் மணப்பெண் கோலத்தில் திருமணப் புகைப்படங்களை மீதா ரகுநாத் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். மீதாவுடன் இணைந்து நடித்த கிஷன் தாஸ் உள்ளிட்ட திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் காண