<p>இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அதில் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு சுழற்பந்தில் க்ளாஸ் எடுக்ககூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் அஸ்வின். போட்டி இந்திய அணியின் கரங்களில் இருந்து எதிரணியின் கரங்களுக்குச் செல்கின்றது என்றால் இந்திய அணியின் கேப்டன்களில் தேர்வாக இருக்கும் முதல் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். </p>
<p>சுழற்பந்தில் சம்பவம் செய்யும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 35 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் சார்பில் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். </p>
<p>ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை தனது 99வது டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளார். இதுவரை இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். </p>