Actor surya shares thalapathy vijay friendship and college days memories | Surya-Vijay: ”காலேஜில் நானும், விஜய்யும் செய்ததை சொன்னால் நல்லா இருக்காது”


Surya-Vijay: காலேஜ் படிக்கும் போது நானும் விஜய்யும் அதிகமாக சேட்டை செய்துள்ளோம் என்று விஜய் குறித்து சூர்யா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
நடிகர் விஜய் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். கட்சி அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் குறித்து பழைய இண்டர்வியூ ஒன்றில் சூர்யா பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 
 
காலேஜ் நாட்களில் விஜய்யுடன் படித்தது குறித்து நடிகர் சூர்யா பேசியுள்ளார். அதில், “நானும், விஜய்யும் ஒரே பேட்ச் மேட்ஸ்தான். ஒருமுறை காலேஜில் கல்சுரல் நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்யும்போது, விஜய்யை சந்தித்தேன். அப்போதுதான் நாங்கள் நண்பர்களாகினோம். காலேஜ் டைமில் நாங்கள் எவ்வளவோ சேட்டை செய்துள்ளோம். அதை எல்லாம் இப்போ சொன்னால் நல்லா இருக்காது” என்று கூறியுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், சூர்யா, நேருக்கு நேர் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். பின்னர் பிரண்ட்ஸ் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். நேருக்கு நேர் படத்தில் ஒருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நடித்த நிலையில், பிரண்ட்ஸ் படத்தில் இருவரும் உயிர் கொடுக்கும் நண்பர்களாக நடித்திருந்தனர். இருபது ஆண்டுகளை கடந்தும் இருவரது நட்பும் பலமாக இருந்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யா, பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஹிஸ்ட்ரி ஜானரில் பிரமாண்டமாக எடுக்கும் கங்குவா படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. 
 

படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக்கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் முடிய நேரமாகும் என்பதால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவா படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

 

மேலும் காண

Source link