young heros who are underrated in tamil film industry and waiting for a hit movie


தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான முகங்களாக, திறமையான நடிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்கும் ஒரு படமாக அமையாமல் பல யுங் ஹீரோக்கள் அவதிப்படுகிறார்கள். ஒரு சில படங்களில் ஹீரோக்களாக நடித்தும் அவர்களின் திறமை குறைந்து மதிப்பிடப்படுகிறது. அவர்களை இந்த திரையுலகில் நிலைநிறுத்திக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள். அப்படி ஒரு சில யுங் ஹீரோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்:

மகேந்திரன் :
குழந்தை நட்சத்திரமாக தனது குறுகுறு பார்வையால் துறுதுறுப்பான பேச்சால் பலரையும் கவர்ந்தவர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக நாட்டாமை படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து தாய்க்குலமே தாய்க்குலமே, மின்சார கண்ணா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, படையப்பா, நீ வருவாய் என, மாயி என ஏராளமான படங்களில் அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். 2013ம் ஆண்டு ‘விழா’ திரைப்படம் மூலம் ஹீரோவாக உயர்ந்த மகேந்திரனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. குழந்தை நட்சத்திரமாக மக்களை கவர்ந்த அவரால் ஒரு ஹீரோவாக நிலைநிறுத்தி கொள்ள முடியாமல் தவிக்கிறார். அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்த வந்தாலும் நிலையான ஒரு இடத்தை அடைய முடியவில்லை. 

கதிர் :
‘மதயானை கூட்டம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கதிருக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் நல்ல ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.  அப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தாலும் அவரால் ஒரு தனித்துமான ஹீரோவாக அடையாளம் பெற முடியவில்லை. 
அதர்வா முரளி :
மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா முரளி ‘பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, கணிதன், இமைக்கா நொடிகள் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் அவரின் தத்ரூபமான நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். பல படங்களில் தொடர்ச்சியாக நடித்த வந்தாலும் அவருக்கு ஒரு பிரேக்கிங் படமாக ஒரு வெற்றிப்படம் அமையவில்லை. 

ஸ்ரீ :
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீ அறிமுகமான “வழக்கு எண் 18/9” திரைப்படம் நல்ல ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் என பல வெற்றிப்படங்களில் ஸ்ரீ பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து இருந்தாலும் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் அமையும் ஒரு படம் கிடைக்காமல் போராடி வருகிறார். மிகவும் திறமையான நடிகர் என்றாலும் அவரின் திறமைக்கு ஏற்ற அடையாளம் இதுவரையில் கிடைக்கவில்லை.  

மேலும் காண

Source link