vikranth massey could not stop crying reveals 12th fail assistant director jaskunwar kohli


படத்தில் மிக முக்கியமான ஷாட் முடிந்த பின் நடிகர் விக்ராந்த் மாஸி கதறி அழுததாக 12th ஃபெயில் படத்தின் உதவி  இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
12th ஃபெயில்
கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸி, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியானது. ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. மனோஜ் குமார் தனது வாழ்க்கையில் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஐ.பி. எஸ் பரிட்சையில் வெற்றிபெறும் தருணம் மிக உணர்ச்சிகரமாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட விதம் ரசிகர்களை மிக உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விக்ராந்த் மாஸ்ஸி
இப்படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கும் முக்கிய காரணங்களில் ஒருவர் நடிகர் விக்ராந்த் மாஸி. Death In The Gunj, Lootera உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸி. தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வரும் விக்ராந்த், முன்னதாக நடித்த டெத் இன் தி கஞ்ச் படத்தில்  கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து மீளமுடியாமல் வளர்ந்த ஒரு மனிதனின் உளவியலை தனது நடிப்பில் வெளிப்படுத்தினார். 12th  ஃபெயில் படத்தில் மனோஜ் குமாராக அவர் நடித்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. 

ஷாட் முடிந்தபின் கதறி அழுதார்
விக்ராந்த் மாஸி இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடித்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இப்படத்தின் உதவி இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இப்படி கூறியுள்ளார். “இந்தப் படத்தின் இறுதிகாட்சியில் கதாநாயகன் மனோஜ் குமார் தனது தேர்வு முடிவுகளைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசமாக அழுவார். நின்றவாக்கில் தரையில் முழங்காலில் விழுந்து அழ வேண்டும். அந்த காட்சி நிறைய டேக் எடுத்தது , ஆனால் விக்ராந்த் மாஸி மறுபடி மறுபடி எழுந்து மீண்டும் முழங்காலில் விழுந்து  நடித்துக்கொண்டே இருந்தார். அந்த காட்சியில் அவருக்கு ஒரு வசனம்தான் இருந்தது.
அந்த காட்சி முடிந்து இயக்குநர் கட் சொன்னபிறகும் கூட விக்ராந்த் மாஸி அழுவதை நிறுத்தவில்லை. அவர் தொடர்ச்சியாக அந்த ஒரு வரியை சொல்லிக்கொண்டே இருந்தார். மனோஜ் குமாரைப்போல் இந்த இடத்திற்கு வர தனக்கு 19 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று விக்ராந்த் மாஸி தெரிவித்தார்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண

Source link