அப்போகலிப்டோ

மெல் கிப்சன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படம் அபோகலிப்டோ. செவ்விந்திய பழங்குடிகளை மையமாக வைத்து அவர்களின் மொழியில் வெளியான ஒரே படம். ஒரு கொடூரமான ஆதிக்க இனத்தால் அடிமைப்படுத்தப்பட்ட கதாநாயகன் தனது குடும்பத்திற்காக தப்பை எதிர்த்து போராடும் கதை இந்தப் படம். உலக மக்கள் அனைவரையுக் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு படம் அபோகலிப்டோ.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு மிகப்பெரிய உந்துதலாக இந்தப் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் தற்போது என்ன தோற்றத்தில் எப்படி இருப்பார்கள், அவர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ரூடி யங்பிளட் (Rudy Youngblood)

அப்போகலிப்டோ படத்தில் ஜாக்வார் பா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரூடி யங்பிளட் . நடிகர் மட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகரும் கூட. இந்தப் படத்தில் நடித்த போது அவரது வயது 24. தற்போது அவருக்கு 41 வயதாகிறது. தற்போது அவர் திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் சே சம்திங் ( say something ) என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

டாலியா ஹெர்னாண்டஸ் ( Dalia Hernández )

இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டாலியா ஹெர்னாண்டஸ். மெக்ஸிகோவை பூர்விகமாக கொண்டவர். இப்படத்தில் நடித்தபோது அவருக்கு 21 வயது. தற்போது அவருக்கு 38 வயதாகிறது.

இயாஸுவா லாரியோஸ் (Iazua Larios )

இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இயாஸுவா லாரியோஸ் கியூபா நாட்டைச் சேர்ந்தவர். இப்படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 21. தற்போது அவருக்கு 39 வயதாகிறது. நடிகர், நடனக்கலைஞர் என பன்முகத்தன்மைக் கொண்ட இவர் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வருகிறார்.

ரெளல் மேக்ஸ் ட்ருச்சில்லோ (Raoul Max Trujillo)

ஜீரோ வுல்ஃப் என்கிற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ரெளல் மேக்ஸ் ட்ருச்சில்லோ. இந்தப் படத்தில் நடிக்கும்போது அவரது வயது 51. தற்போது அவருக்கு 68 வயதாகிறது. இவர் இறந்துவிட்டதாக இணையதளங்களில் நிறைய வதந்திகள் பரவின. ஆனால் 68 வயதிலும் ஆரோக்கியமான உடலுடன் சினிமா, நாடகம் , தொலைக்காட்சித் தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.