Rajinikanth:அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை

நாடு முழுவதும் நேற்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்துதான். இதில் நாட்டின் பிரதமர்  நரேந்திரமோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது. 
ராமர் கோயில் திறப்பு விழா:
இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.  
இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ”அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவினை நான் ஆன்மீகமாகத்தான் பார்க்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அனைவரது பார்வையும் ஒரேமாதிரி இருக்கவேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார். 
 

Source link