Zee Tamil Sandhya Ragam Serial January 20th Episode Update | Sandhya Raagam: சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம், வெளியேறியது யார்?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
காலேஜ்க்கு போன முதல் நாளே மாயா ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் இறங்க அவளுக்கு ஆதரவாக மொத்த மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். காலேஜ் நிர்வாகிகள் மாயா விஷயமாக ரகுராமை பார்த்து பேச முடிவெடுத்து வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களை சொல்கின்றனர். ரகுராம் நான் வரேன், வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டில் இருப்பவர்களிடம் அந்த மாயாவோட துணிகளை எல்லாம் மூட்டை கட்டி வைங்க, இன்னையோட அவ அந்த வீட்டில் இருக்க கூடாது என்று சொல்லி கிளம்புகிறார்.
அதனை தொடர்ந்து ஜானகி செய்வதறியாது நிற்க ரகுராம் காலேஜ் வந்து இறங்க மீடியா அவரை சுற்றி வளைக்கிறது, உங்க வீட்டு பொண்ணு இப்படி போராட்டத்தில் குதித்து இருக்காங்க, ஆடை கட்டுபாட்டை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? என்று கேள்வி எழுப்புகின்றனர். ரகுராம் யாரும் எதிர்பாராத விதமாக மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று சொல்கிறார்.
இதனால் அடுத்து என்ன நடக்கும்? மாயா ரகுராம் இடையேயான உறவு வலுப்படுமா என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் சந்தியா ராகம் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவலும் கிடைத்துள்ளது, அதாவது டைம் மட்டுமில்ல இந்த சீரியலின் நாயகிகளில் ஒருவரும் மாற்றப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது, தனிப்பட்ட சில காரணங்களால் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா என்ற தெலுங்கு நடிகை நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.தாராவுக்கு பதிலாக தனம் கதாபாத்திரத்தில் பாவனா லஸ்யா இடம் பெறும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link