மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…

மும்பை அருகே நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பையில் இருந்து புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி பகுதிக்கு சிறிய விமானத்தில் சென்றார்.

பாராமதியில் விமானம் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி, தீ பிடித்து எரிந்த‍து. விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், தீயை அணைத்து, உடல்களை மீட்டனர்.

விமானத்தில் இருந்த அஜித் பவார், பைலட்டுகள் உட்பட 6 பேரின் உடல்கள் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டன. மகாராஷ்டிரா முதல்வர் அஜித் பவார் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள், டிஜிசிஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவாரின் மறைவுக்கு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதல்வர், விமான விபத்து, மும்பை, புனே, maharatra dy cm, ajith pawar, plane crash,