கேரளாவில் அந்தரத்தில் தொங்கும் ரெஸ்டாரன்டில், பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அனேச்சல் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு அந்தரத்தில் தொங்கும் ஸ்கை ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. அங்கு, அந்தரத்தில் இருந்து உணவு சாப்பிட சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், மலப்புரத்தில் இருந்து, 2 சிறுவர்கள் பெற்றோர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள், ஸ்கை ரெஸ்டாரன்ட் புக் செய்து சென்றனர். ஆனால், அந்தரத்தில் இருந்தபோது, ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டு, அந்தரத்திலேயே தொங்கும் நிலை ஏற்பட்டது.
இதனல், சுற்றுலாப் பயணிகளும், ரெஸ்டாரன்ட் ஊழியரும்கீழே இறங்க முடியாமல் தவித்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் மேலேயை இருந்த நிலையில் மீட்புப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டது.
பின்னர், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹைட்ராலிக் செயலிழப்புக்கான காரணம் குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://x.com/ians_india/status/1994371949368344688 https://x.com/ians_india/status/1994371949368344688
