மகாராஷ்டிராவில் மழை பெய்து வரும் நிலையில், சாலையில் முதலை ஒன்று நடந்து சென்றது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது.
கடற்கரை மாவட்டமான ரத்னகிரியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, சிப்லன் சாலையில் மிகப்பெரிய முதலை ஒன்று திடீரென நடந்து சென்றது.
இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். காரில் சென்றவர்கள் முதலை நடந்து சென்றதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
https://x.com/ShivAroor/status/1807635116610445783
அருகில் உள்ள ஷிவா ஆற்றில் ஏராளமான முதலைகள் இருக்கும் நிலையில், அங்கிருந்து இருந்து அந்த முதலை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கனமழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், முதலை வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.