டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத் என்று ரசிகர்கள் முழக்கமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது.
அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம் அச்சிடப்பட்ட மஞ்சள் டி-சர்ட்டுகளை அணிந்திருந்த பலர், திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் ஜிந்தாபாத் என்று முழக்கங்களை எழுப்பினர்.
https://x.com/mufaddal_vohra/status/1787893964223267019
மேலும், கையில் கெஜ்ரிவால் படம் உள்ள பதாகைகளும் ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். விளையாட்டுப் போட்டிகளுக்கு இடையே, அரசியலை கொண்டு வந்துவிட்டார்களே என்று சிலர் வெளிப்படையாக பேசினர். இதனிடையே, இந்த போஸ்ட்டை வெளியிட்ட நபர், உடனடியாக அதனை நீக்கியுள்ளார்.