Actor Soori shares the video of him watching kallazhagar in vaigai river


மதுரை நகரமே சித்திரை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அந்த வகையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டு கடவுளின் ஆசி பெற்றனர். 
 

அந்த வகையில் மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்த சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டார். மக்களோடு மக்களாக நடிகர் சூரி கலந்து கொண்டார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவருடன் செஃல்பி எடுத்து கொண்டனர். 
மேலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் “வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இந்தியாவுக்கே பெருமை; உலகுக்கே முக்கியமான திருவிழா” என பூரிப்புடன் பதிவிட்டு இருந்தார். 
தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கள்ளழகர் பவனியில் கலந்து கொண்டு பூஜைகள் செய்த வீடியோ ஒன்றை பகிர்ந்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். “அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். “இவர்தான்டா அழகர்..நல்லா பாரு” என்றார் அப்பா… மறக்க முடியாத நாள் அது… அதுக்கப்புறம் இப்போதுதான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!” என போஸ்ட் செய்து இருந்தார் நடிகர் சூரி. 

அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். “இவர்தான்டா அழகர்..நல்லா பாரு” என்றார் அப்பா… மறக்க முடியாத நாள் அது… அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும்… pic.twitter.com/yJ8bKmN5Gw
— Actor Soori (@sooriofficial) April 23, 2024

அழகர் திருவிழா குறித்து நடிகர் சூரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் மதுரையில கள்ளழகர் ஆத்துல இறங்குவதை பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். சின்ன வயசுல அப்பாவோட தோள் மேல ஏறி உட்கார்ந்து பார்க்க வருவேன். அந்த நினைவுகளை எல்லாம் மறக்கவே முடியாது. சினிமால பிஸியா இருந்ததால வரமுடியுமா போச்சு. ஆனா இந்த வருஷம் மறக்காம வந்துட்டேன். லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்திருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்குது. சாதி, மதம் பார்க்காம அனைத்து மக்களும் இங்கு ஒன்றிணைவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது. இந்த நாளில் நான் கலந்துகொள்வது ரொம்ப சந்தோசமாக, பெருமையாக இருக்கிறது என பேசி இருந்தார் நடிகர் சூரி. 

மேலும் காண

Source link