தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/Pepl3brIF4
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 15, 2024
இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண