Indian Student Shot Dead Inside His Audi In Canada South Vancouver | காரில் வைத்து கொல்லப்பட்ட இந்திய மாணவர்! கனடாவில் தொடரும் மர்மம்


கனடாவில் முந்தைய காலங்களை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருமளவும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது.
குறிவைக்கப்படுகிறார்களா கனடா வாழ் இந்தியர்கள்?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டாவாவில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். சமீப காலமாக, கனடா வாழ் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இப்படியான நிலையில், மீண்டும் அங்கு ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வான்கூவர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “ஏப்ரல் 12 ஆம் தேதி, இரவு 11 மணியளவில் கிழக்கு 55வது அவென்யூ மெயின் ஸ்ட்ரீட்டில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
காரில் இந்திய மாணவர் மர்ம மரணம்:
சம்பவ இடத்திற்கு சென்றபோது, அப்பகுதியில் சிராக் அன்டில் (24) என்பவர் வாகனத்திற்குள் இறந்து கிடந்தார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார். சிராக் அன்டிலின் சகோதரர் ரோனிட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலையில் தொலைபேசியில் பேசியபோது சிராக் மகிழ்ச்சியாகத் தெரிந்தார். பின்னர், வெளியில் செல்ல வேண்டும் என கூறிவிட்டு தனது ஆடி காரை எடுத்து சென்றார். அப்போதுதான், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார். கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் தேசிய மாணவர் சங்க தலைவர் வருண் சௌத்ரி இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், “கனடாவின் வான்கூவரில் சிராக் அன்டில் என்ற இந்திய மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவசர கவனம் தேவைப்படுகிறது.
விசாரணையின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து நீதி விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம். மேலும், இந்த கடினமான நேரத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
சிராக் ஆண்டிலின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அவரது குடும்பத்தினர் க்ரவுட் ஃபண்டிங் தளமான GoFundMe மூலம் பணம் திரட்டி வருகின்றனர். கடந்த 2022ஆம் செப்டம்பர் மாதம், வான்கூவருக்கு வந்தவர் சிராக் ஆன்டில். கனடா வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்த அவர் சமீபத்தில் பணி அனுமதியைப் (Work Permit) பெற்றார்.

மேலும் காண

Source link