7 Am Headlines today 2024 april 14th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

அம்பேத்கர் பிறந்தாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை உறுதிமொழி ஏற்போம் – முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் 
தமிழ் புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவையும் அழிக்கட்டும் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து 
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு – திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை  
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல்வீச்சு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் 
ராகுல் காந்தி தமிழ்நாடு வருகையால் பாஜகவின் மொத்த பிரச்சாரமும் காலி – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் 
அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் – அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி 
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் – 10 கி.மீ., தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுப்பால் போக்குவரத்து நெருக்கடி 
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கியது
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாஃபர் சாதிக் ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாக அமலாக்கத்துறை தகவல் 
3 ஆண்டுகளில் இதே இடத்துக்கு வந்து தமிழில் பேசுவேன் – கன்னியாகுமரி பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு 
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நெல்லை வருகை – ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை 
தமிழ்நாட்டில் நாளை முதல் மீன்பிடி தடைகாலம் அமல் 
பாஜகவின் வெறுப்பு அரசியலை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை 

இந்தியா: 

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் – ராகுல்காந்தி உறுதி 
மோடி அரசு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை – அவரின் வார்த்தைகளை கண்டு மயங்கி விட வேண்டாம் என பிரியங்கா காந்தி பரப்புரை 
மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது 
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல்வீச்சு 
திகார் சிறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டு 
கேரளாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு 
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் – மத்திய வெளியுறவுத்துறை உத்தரவு
இந்தியாவை வலிமையற்ற நாடாக மாற்ற இந்தியா கூட்டணி விரும்புவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு 

உலகம்: 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பலை ஈரன் சிறை பிடித்ததால் பரபரப்பு 
இஸ்ரேல் – ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படலாம் – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை 
பாகிஸ்தானில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழப்பு 
பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேரை கடத்தி கொன்ற ஆயுதக்குழுவினர் – அதிகரிக்கும் பதற்றம் 
ஆஸ்திரேலியாவின் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

விளையாட்டு: 

ஐபிஎல் தொடர்: இன்றைய ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதல் 
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி 
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ – கொல்கத்தா அணிகள் மோதல் 
2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் – முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் நம்பிக்கை 

Published at : 14 Apr 2024 07:34 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link