நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் (Captain Miller) படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் அப்படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷின் கேப்டன் மில்லர்
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் என பலரும் நடித்துள்ளனர்.
#CaptainMiller #CaptainMillerPongal #CaptainMillerReview #Dhanush what an actor 🔥🔥🔥. #Kollywood is blessed with such a natural actor. First Half : Book your ticket and please watch it in good theater.
— Karthik (@meet_tk) January 12, 2024
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர் படமானது பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகிவிட்டது. படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி வெளியானது. ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் கேப்டன் மில்லர் படம் உருவானதின் கடினமான பின்னணி குறித்து பேசினர். தொடர்ந்து இன்று கேப்டன் மில்லர் படம் உலகமெங்கும் 900க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியுள்ளது. 3 வருடங்களுக்குப் பின் தனுஷ் படம் பொங்கலுக்கு வெளியானதால் அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டருக்கு படையெடுத்தனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. இதனால் பிற மொழிகளில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி விட்டது. இதனைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
]]>