உலக அளவில் பிரபலமான பாப் பாடகி ரிஹானாவின், சமீபத்தில் வெளியான இதழின் அட்டைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ரிஹானா அட்டைப்படம்:

சர்வதேச பாடகியான ரிஹானா பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பக்கூடிய பாடகி. இவர் சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்று பாடல் பாடினார். அவர் நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பேச பட்டது

ரிஹானா தனது சமீபத்திய இதழ் அட்டைப்படத்தின் புகைப்படமானது, பெரும் கவனத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்ட இன்டர்வியூ என்கிற இதழில் ரிஹானாவின் புகைப்படம் மற்றும் அவர் குறித்து பேட்டி வெளியானது.

குறிப்பாக ரிஹானாவின் புகைப்படமானது, அந்த இதழின் அட்டைப்படத்தில் இருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அந்த அட்டைப்படத்தில் கன்னியாஸ்திரி உடையில் போஸ் கொடுத்துள்ளார் ரிஹானா. ஆனால், அதில் கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார்.

சர்ச்சைக்குள்ளான புகைப்படம்:

அந்த இதழுக்கு போஸ் கொடுக்கும் போது, அதில் கவர்ச்சிகரமாக இருந்ததாக் பலரும் கருத்துகளை பகிர்ந்துள்ளார். மேலும் இது மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவரின் நன்மதிப்பை கெடுத்துள்ளார் என்றும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மேலும் ரிஹானா கேமராவுக்கு போஸ் கொடுப்பதை காட்டும் வீடியோவும் பகிரப்பட்டது.

இது ரிஹானா மீதான நன்மதிப்பு கெடுத்துவிட்டது என்று சிலர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர்..

ரிஹானாவின் துணிச்சலான அட்டைப்படத்திற்காக பலர் பாராட்டினாலும், சமூக ஊடகங்களின் ஒரு பகுதியினர் அவரை ‘மத கேலிக்குரியவர்’ என்றும் விமர்சித்தனர். அவரது தோற்றத்தை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

சிலர் தெரிவிக்கையில் "இது எங்கள் மிகவும் மதிப்பிற்குரிய ரிஹானாவின் செயலானது, கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் செயலாகும். .. அவர்கள் இதை ஒருபோதும் ஹிஜாப்புடன் முயற்சிக்க மாட்டார்கள்" என்று ஒரு சமூக ஊடக பயனர் எழுதினார்.

"நான் ரிஹானாவை நேசிக்கிறேன், ஆனால் மத பிரதிநிதித்துவங்களை பாலியல் ரீதியாக வெளிப்படுத்தியது ஏன் ஆவேசம் என்று எனக்கு ஒருபோதும் புரியவில்லை," என்று அவர் கூறினார்.

பேட்டியில் உள்ள மற்றொரு புகைப்படத்தில் ரிஹானா குறைவான ஆடையுடன் காணப்படுகிறார்.

இதற்கிடையில், ரிஹானா நேர்காணலில், மார்பகங்கள் குறித்து பேசியதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பலரும் எதிர்மறை மற்றும் நேர்மறை கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.