7 Am Headlines today 2024 april 10th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி ஏன் பேசவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி 
வேலூர் மற்றும் கோவையில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்
தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாட்டம், நேற்று பிறை தென்படாததையடுத்து அறிவிப்பு வெளியானது
பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு துணைப்போனவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக அதிமுக தமிழ் இனத்திற்கு எதிரானவர்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் சாடல் 
சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
சென்னையில் ரோட் ஷோ மூலம் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு, சென்னை மனதை வென்றுவிட்டதாக பிரதமர் மோடி உருக்கம் 
உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆர்.எம். வீரப்பணுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் நேரில் அஞ்சலி
பிரதமர் மோடியிடம் நாட்டை கொடுத்தால் இந்தியாவை மறந்துவிட வேண்டும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம்
கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை, வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என தகவல்
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு -வானிலை மையம் 
வேதாரண்யம் அருகே வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா, வாழைப்பழத்தை ஆர்வத்துடன் எடுத்துச் சென்ற பக்தர்கள்
சென்னையில் ஐபிஎல் தொடர் – 7 நாட்களுக்கு சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் 
கோடை விடுமுறை முன்னிட்டு சென்னை – நெல்லை வரை சிறப்பு ரயில் இயக்கம்

இந்தியா:

மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி, கைது சட்ட விரோதமானது அல்ல என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம் 
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து உச்சநீதிமன்றம் நாட உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு 
நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு திரும்பும் சந்திரயான் – 4 திட்டம் இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி 
குஜராத்தில் பாவ் நகரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது
மோடி ஆட்சியில் ஒரு அங்குள நிலம் கூட ஆக்கிரமிக்க முடியாத சீன பின்வாங்கியது – அமித்ஷா பேச்சு 
சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
தெலங்கானாவில் 106 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையர், கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் நடவடிக்கை 

உலகம்: 

அமெரிக்க வருடாந்திர விண்வெளி கருத்தரங்க கூட்டத்தில் சந்திரயான் 3 குழுவிற்கு விருது
காசாவில் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம் – இஸ்ரேல் பிரதமர் சூளுரை – அமெரிக்க எதிர்ப்பு 
கனடா: இந்திய வம்சாவளி தொழிலதிபர் மற்றும் 2 பேர் சுட்டுக்கொலை  

விளையாட்டு:

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி இன்று மோதல் 
நியூசிலாந்து எதிரான டி20 கிரிகெட் போட்டி: பாகிஸ்தான் அணியில் முகமது அமீர், இமாத் வாசிம் சேர்ப்பு

Published at : 10 Apr 2024 07:03 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link