செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இதனைத் தொடர்ந்து பீஸ்ட், பகாசுரன், சாணி காயிதம் , உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் செல்வராகவன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
செல்வராகவனைக் கவர்ந்த பாடல்கள்
தன்னை ஒரு விஷயம் கவர்கிறது என்றால் அதை சமூக வலைதளத்தில் பகிர தவறமாட்டார் செல்வராகவன். பிடித்த படங்கள் , பிடித்த பாடல் என இதில் அனைத்தும் அடக்கம். சமீபத்தில் மம்மூட்டி நடித்து வெளியான பிரமயுகம் படத்தைப் பார்த்து மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று’ கமெண்ட் செய்திருந்தார்.
அதுபோக தினமும் ஒரு பாடல் என தனது புகைப்படங்களை வெளியிட்டு பாடல்களை பகிர்ந்து வருகிறார். முன்னதாக மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ‘ நெஞ்சமே நெஞ்சமே’ பாடலையும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘அலைகடல் ‘ பாடலையும பாராட்டி அவர் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து தற்போது ஆடு ஜீவிதம் படத்தில் இடம்பெற்ற “பெரியோனே என் ரகுமானே” பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். இந்தப் பாடலை கேட்டுதான் தினமும் தனது நாளை தொடங்குவதாக செல்வராகவன் சிலாகித்துப் பதிவிட்டுள்ளார்.
மேலும் காண