ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 30 ) 11 வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில், கே.எல்.ராகுல் 9 பந்துகள் வரை களத்தில் நின்ற 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி என மொத்தம் 15 ரன்களை விளாசினார்.
க்ருணால் பாண்டியா அதிரடி:
இதனிடையே குயின்டன் டி காக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் தேவ்தட் படிக்கல் களம் இறங்கினார். அதன்படி 9 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 9 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
𝙀𝙛𝙛𝙤𝙧𝙩𝙡𝙚𝙨𝙨 𝘽𝙖𝙩𝙩𝙞𝙣𝙜Krunal Pandya with the finishing touches 👌👌His cameo is helping #LSG reach a good total 💪Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #LSGvPBKS | @LucknowIPL pic.twitter.com/UkIo5FOIDd
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
பின்னர் குயின்டன் டி காக் உடன் மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். அந்த வகையில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டார். 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். அப்போது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த குயின்டன் டி காக் அரைசதம் விளாசினார். மொத்தம் 38 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 54 ரன்கள் குவித்தார்.
பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த க்ருணால் பாண்டியாவும் அதிரடி காட்டிக்கொண்டிருந்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ரபாடா வீசிய பந்தில் நிக்கோலஸ் பூரன் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்படி 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ரன்களை குவித்தார். மறுபுறம் க்ருணால் பாண்டியா கடைசி வரை களத்தில் நின்று 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 43 ரன்களை குவித்தார். இவ்வாறாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்க உள்ளது.
மேலும் காண