கச்சபேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்..! படை எடுக்கும் மக்கள்..! ஏற்பாடுகள் என்னென்ன ?


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
 
கோவில் நகரம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகரம், சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என இரண்டு பகுதிகளாக  உள்ளது. இந்த காஞ்சி மாநகரில்,  எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் ஒரு கோவில் கோபுரத்தை பார்த்து விட முடியும். காஞ்சிபுரம் முழுவதும்  கோவில்களால் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரத்திற்கு “கோவில் நகரம் “பெயரும் உள்ளது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் காஞ்சிபுரம் கோவில்களை பார்க்க படையெடுத்து வருவது வழக்கமாகி உள்ளது. நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கச்சபேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆனது இன்று  நடைபெற உள்ளது. 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
19 ஆண்டுகள் கழித்து இன்று காலை 10 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுமார் 30,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நெல்லுக்கார தெரு வழியாக வாகனங்கள் செல்ல தடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள 11 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே பல்வேறு யாகங்கள் வளர்க்கப்பட்டு தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது
 
விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்
 
1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி,  
 
2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
 
3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்,
 
4.தி/ள்அந்திரசன் பள்ளி,
 
5.தி/ள்பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி,
 
6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
 
7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
 
8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும்
 
9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள்,
 
10ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 
 
11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  ( kanchipuram kachabeswarar temple )
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  விளங்கி வருகிறது.  இந்தக் கோயில் ” கச்சபேசம் ” எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில்  தனி படலமாக   அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்  தல புராணம்
 அமிர்தம் எடுப்பதற்காக,  பாற்கடலை  கடைந்த பொழுது  மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில்,  மூழ்கிக் கொண்டிருந்தது.  இதனால் அமிர்தம் கிடைக்காமல்  பணி தடைபடும் அபாயம் இருந்தது.  இதனால் மகாவிஷ்ணு  ஆமை   அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு   உண்டாகியதாக கூறப்படுகிறது.  உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால்  சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை,  வென்டக மலையனிடையே  மறைத்து   வைத்துள்ளார் அதன் பிறகு,  தனது தவறை  உணர்ந்து. இதனை அடுத்து  திருமால்  ஆமை வடிவத்தில்  சிவனை வழிபட்டுள்ளார். 
 

மேலும் காண

Source link