Ninaithen Vandhai serial zee tamil today march 21st written update | Ninaithen Vandhai:மனோகரி போட்ட பிளான்: சம்மதம் சொன்ன எழில், தப்பிப்பாளா சுடர்?


ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எழில் மறைந்து மறைந்து வெளியே கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது எழில் வெட்கப்பட்டு வெளியே செல்ல முயற்சி செய்ய, சுடர் எதிரில் வந்து நிற்கிறாள். என்னை தானே தேடுகிறீர்கள் என்று கேட்க, இல்லையே என்று சொல்லி எழில் கிளம்பிச் செல்கிறான்.  இதைப் பார்த்த மனோகரி ஏதாவது செய்து இவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் முடிவெடுக்கிறாள். பிறகு குழந்தைகளிடம் சென்று “நீங்க வெளில எங்கயாச்சும் போயிட்டு வரலாமே” என்று சொல்ல, குழந்தைகள் “அப்பா அதெல்லாம் அனுப்ப மாட்டாங்க எங்களுக்கு வெளியே போறதுனா மொட்டை மாடிக்கு போவது தான்” என சொல்கின்றனர். 
“நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன்” என்று சொல்லி மனோகரி எழிலிடம் பர்மிஷன் கேட்க, சுடர் சொன்ன விஷயங்களை நினைத்து பார்த்து அவன் ஓகே சொல்கிறான். இதையடுத்து மனோகரி சுடரையும் குழந்தைகளையும் பீச்சுக்கு அனுப்பி வைத்து, குழந்தைகளுக்கு ஏதாவது ஆக வைத்து விட்டால் சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவான் என்று பிளான் போடுகிறாள். 
இந்த நிலையில் எதிர்பாராத ட்விஸ்ட்டாக எழிலுக்கு காபி கொடுக்கும் சுடர், பசங்களோட பீச்சுக்கு நீங்களும் வரலாமே என்று கூப்பிட, எழிலும் சம்மதம் தெரிவிக்கிறான். இப்படியான நிலையில் இன்றைய நினைத்தேன் வந்தாய் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண

Source link