சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட ராணா படம் பற்றி நடிகர் ரமேஷ்கண்ணா நேர்காணல் ஒன்றில் பேசியதை காணலாம்.
கைவிடப்பட்ட ராணா:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். நடிக்க வந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மார்க்கெட்டில் ரஜினி தான் நம்பர் 1 என்னும் அளவுக்கு 72 வயதிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இப்படியான ரஜினி கருப்பு வெள்ளை, கலர், 3டி, அனிமேஷன் என அத்தனை வகையான டெக்னாலஜியிலும் நடித்த ஒரே நடிகராவார். இதனிடையே அவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவரின் 170வது படமாகும்.
இப்படியான நிலையில் ரஜினி நடிப்பில் சில படங்கள் அறிவிக்கப்பட்டு எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட கதைகளும் உள்ளது. அப்படியான ஒரு படம் தான் “ராணா”. எந்திரன் படத்துக்குப் பின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினியை வைத்து படமெடுக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. முன்னதாக 2007 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கிய அனிமேஷன் படத்துக்காகவே ரஜினி அவரை அணுகியிருந்தார்.
கோச்சடையான்:
அதனைக் கேட்ட கே.எஸ்.ரவிகுமார், 15 நாட்களில் ஒரு கதையை உருவாக்கி ரஜினியை சந்திக்கிறார். அந்த கதையில் ஈர்க்கப்பட்ட ரஜினி அதில் இடம் பெற்ற ஒரு கேரக்டரை கொண்டு தனிப்படமாக எடுக்க விருப்பப்பட்டார். அந்த படம் தான் ராணா. இந்த படம் 2011 ஆம் ஆண்டு படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலின் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.கிட்டதட்ட மரணத்தில் விளிம்பு வரை சென்று ரஜினிகாந்த் மீண்டு வந்தார். ராணா படத்தில் குதிரையேற்றம் உள்ளிட்ட காட்சிகள் இருந்தது. ரஜினி உடல்நிலை ஒத்துழைக்காததால் அப்படம் கைவிடப்பட்டது.
பின்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய அந்த படம் சற்று மாற்றம் செய்யப்பட்டு “கோச்சடையான்” படமாக வெளியானது. ஆனாலும் ராணா படம் எடுக்கப்படாமல் போனது ரஜினி ரசிகர்களை சற்றே ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, “ரஜினி 100 படம் பண்ணினாலும் ராணா மாதிரி படம் பண்ண முடியாது. அப்படத்தின் கதையே ரஜினி சொன்னது தான். மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. ஒரு வில்லன், ஒரு ஹீரோ என இரட்டை வேடம் கொண்டது ராணா கதை.
வில்லனாக ரஜினி பண்ணினால் எங்கேயே போய் விடுவார் இல்லையா?. ஆனால் பண்ண மாட்டேங்குகிறார். அப்படத்தின் பட்ஜெட் ரொம்ப பெரியது. ராணா – சேனா கதை தான் அது. அதன்பிறகு ராணாவின் அப்பாவாக கோச்சடையான் கதை உருவாக்கப்பட்டது. அந்த படம் சிரஞ்சீவியை வைத்து பண்ணலாமா என ரஜினியிடம் கேட்டோம். ஆனால் அவர் எங்களை வெயிட் பண்ண சொன்னார். அந்தளவுக்கு அது அற்புதமான சப்ஜெக்ட் ராணா படம். அப்படத்தில் வில்லன் கேரக்டர் மிரட்டலாக இருக்கும்” என கூறியிருந்தார். இந்த படம் ரஜினி மீண்டும் தொடங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாகவே உள்ளது.
மேலும் காண