உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று தர உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்திருந்த மனு மீதான தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது.
அதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தங்களுடைய தரப்பு வாதத்தை முழுமையாக கேட்கவில்லை என்ற சென்சார் போர்டின் வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை தீர விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதனால், ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முதலில் இருந்து விசாரணைக்கு வர உள்ளது. இதன் காரணமாக ஜனநாயகன் ரிலீஸ்
ஜனநாயகன், vijay, tvk, tvk vijay, jananayagan, sensor board, highcourt, chennai high court, விஜய், தவெக, தவெக விஜய், உயர்நீதிமன்றம்,

