Joker 2 trailer release date official announcement with new poster


 
‘பேட்மேன்’ படத்தில் வரும் புகழ்பெற்ற ‘ஜோக்கர்’ கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் இப்படத்தில் ஜோக்கராக நடித்திருந்தார். சீட் நுனியில் அமர்த்திவிடும் வகையில் த்ரில்லர் ஜானரில் தத்ரூபமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 
 

 
ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜரை விட பிரமாதமாக நடித்திருந்தார் என ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. படம் வெளியான உடனே நிச்சயம் இது பல பிரிவுகளின் கீழ் அகாடமி   விருதை தட்டி செல்லும் என கணிக்கப்பட்டது. அதே போல சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 11 பிரிவுகளின் கீழ் அகாடமி விருதை வென்று சாதனை படைத்தது. அந்த வகையில் சிறந்த நடிகருக்கான விருதை ஹாக்கின் ஃபீனிக்ஸ் பெற்றார். 17 வயது நிரம்பியவர்கள் மட்டுமே ஜோக்கர் படத்தை பார்க்க வேண்டும் என ‘ஆர்’ ரேட்டிங் பெற்ற அப்படம் சுமார் 1 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஜோக்கர் படத்தின் முதல் பாகத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து தற்போது ஜோக்கர் பார்ட் 2 உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் டிசி காமிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.  இந்த இரண்டம் பாகம் ‘ ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ்’ (Joker: Folie à Deux) என தலைப்பிடப்பட்டுள்ளது.  இது இசை சார்ந்த திரைப்படமாக உருவாவதால் பிரபல பாப் பாடகி லேடி காகா படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். 
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை புதிய போஸ்டருடன் படக்குழு சோசியல் மீடியா மூலம் வெளியிட்டுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜோக்கர் முதல் பாகத்தின் வெற்றியை இந்த இரண்டாவது பாகம் நிச்சயம் முறியடிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

மேலும் காண

Source link