Vadachennai team pays tribute to Daniel balaji vetrimaran anadrea ameer kishore


தென்னிந்திய சினிமாவின் பிரபலமான வில்லன் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. சின்னத்திரையில் சித்தி சீரியல் மூலம் அறிமுகமான டேனியல் பாலாஜி அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்து வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், பிகில், பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் ஒரு அங்கமாக இருந்து தன்னுடையாக நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம்கொஞ்சமாக மெருகேற்றி கொண்டார். 
 

வட சென்னை:
அந்த வகையில் 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘வட சென்னை’. இப்படத்தின் நடிகர் டேனியல் பாலாஜி தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தேனிக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்தது. குறிப்பாக ‘லைப்ப தொலைச்சிட்டியேடா’ என அவர் சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. 
வடசென்னை, பொல்லாதவன் படங்களில் டேனியல் பாலாஜியை வில்லனாக நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் டேனியல்  பாலாஜியின் இறப்பு செய்து கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்படத்தில் டேனியேலுடன் இணைந்து நடித்த நடிகை ஆண்ட்ரியாவும் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்.
வீ மிஸ் யூ அண்ணா:
மேலும் அப்படத்தில் நடித்த நடிகர் கிஷோர் ஒரு நீளமான இன்ஸ்டாகிராம்  பதிவின் மூலம் டேனியல் பாலாஜியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “பொல்லாதவன் படத்திற்கு குழுவுக்கு அது ஒரு படம் மட்டுமல்ல. ஒரு வீட்டில் உள்ள கூட்டு குடும்பமாகவே இருந்தோம். அடிக்கடி நாங்கள் தொடர்பில் இல்லை என்றாலும் பொல்லாதவன் படத்தின் வெற்றி பற்றி செய்திகளை கடந்து செல்லும் போது முகத்தில் புயங்கையும் பெருமைகொள்வோம். எண்களில் யார் எதை செய்தாலும் அதை பெருமையாக உணர்வோம். அடிக்கடி என்னிடம் வடசென்னை 2 எப்போது என பலரும் கேட்பார்கள். வெற்றி மிகவும் பிஸியாக இருப்பதை பார்த்தால் எங்களுக்கு 70 வயது ஆகும் போது தான் அது நடக்கும் என நான் காமெடியாக சொல்வதுண்டு. வீ மிஸ் யு அண்ணா” என போஸ்ட் பகிர்ந்து இருந்தார் நடிகர் கிஷோர். 
 

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் டேனியல் பாலாஜியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் வேலையில் அவருடன் இணைந்து படங்களில் நடித்த நடிகர் விஜய், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர்களுக்கு சக நடிகருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தான் நேரமில்லை என்றாலும் ஒரு இரங்கல் செய்தியை  அனுப்ப கூடவா அவர்களுக்கு நேரமில்லாமல் போனது என பலரும் கண்டனங்களை முன்வைத்து வருகிறார்கள்.’வடசென்னை 2′ உருவாக்கும் எண்ணம் உள்ளது அது விரைவில் நடைபெறும் என வெற்றிமாறன் தெரிவித்து இருந்த நிலையில் தம்பி இல்லாமல் வட சென்னை 2 எப்படி சாத்தியம் என வருத்தத்துடன் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். 
 

மேலும் காண

Source link