அரசு பேருந்து கடத்தல்! பயணிகளிடம் பணம் வசூல்!

பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை கடத்திக்கொண்டு 50 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பேருந்தில் வீசும் இல்லாததால் பாதியிலேயே பேருந்து விட்டு சென்றதும் இல்லாமல் பயணிகளிடம் டிக்கெட்டிற்கான பணத்தையும் வசூலித்து கைவரிசை காட்டியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய மர்ம ஆசாமி ஒருவன் பயணிகளிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அனைவரிடமும் டிக்கெட் கட்டணம் வாங்கி கொண்டு பேருந்தை கிளப்பினான்.

அடுத்த நிறுத்தத்தில் கண்டக்டர் வந்து உங்களுக்கு டிக்கெட் கொடுப்பார் என்று கூறி பேருந்தை ஓட்டிச் சென்றான். பயணிகளும் அமைதியாக இருந்ததால் சுமார் 50 கிலோ மீட்டர் சென்ற பேருந்து நடுவழியில் திடீரென்று நின்றுவிட்டது.

பேருந்தில் டீசல் காலியானதால் எவ்வளவோ முயன்றும் பேருந்தை அந்த திருடனால் மேற்கொண்டு ஓட்ட முடியவில்லை. பேருந்தை விட்டு பயணிகளை இறங்கச் சொன்ன மர்ம ஆசாமி மீது சந்தேகம் எழுந்ததால் அவரை செல்போனில் படம் எடுத்த சிலர் உண்மையிலேயே உன்னை பார்க்க ஓட்டுனர் மாதிரி தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

இனிமேல் தப்ப முடியாது என்ற உணர்ந்த அந்த திருடன் ஐயா நான் அரசு பேருந்து ஓட்டுநர் கிடையாது. இந்த பேருந்தை காயலான் கடையில் போடுவதற்காக திருடிக் கொண்டு வந்தேன் என்று பயணிகளுக்கு அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து அந்த திருடனையும் பேருந்தையும் வீடியோ எடுத்து போலீசுக்கு அனுப்பி வைத்தனர் பயணிகள் தொலைபேசியில் அழைத்த புகாரின் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து வந்தனர்.

இந்த பரபரப்புக்கு இடையே அந்த திருடன் அங்கிருந்து மாயமாகி விட்டான். அதே நேரத்தில் பேருந்தை காணவில்லை என்று அந்த பேருந்தின் உண்மையான ஓட்டுனர் சாமி சித்தி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், பேருந்தை கடத்தி வந்த தேலராஜூ என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.