பெய்ஜிங்: சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் உஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா தொற்றால் முடங்கிய சுற்றுலா தளங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் உஷன் நகருக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். திரும்பும் திசை எங்கும் பூத்து குலுங்கும் துலுக் மலர்கள், பழமை மாறாத வீதிகள்.
மேலும், பச்சை பசேலென காட்சியளிக்கும் பூங்காக்கள் என மனதை மயக்கும் ஹூசைன் நகரில் கட்டிடங்களுக்கு நடுவே பாயும் யாங்சே நதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட படகுகளில் சவாரி செய்து குடுபத்துடன் இளைப்பாறும் மக்கள் வீதிகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கலைநயமிக்க பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். நாள் ஒன்றுக்கு 30,000 பேர் இந்த நகருக்கு இந்த நகருக்கு செல்ல ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 1,50,000 பேர் வந்து சென்றதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App