நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது
மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்’ குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இரவு கஜபூஜை, கோபூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டுகால யாகசாலை பூஜையில் பங்கேற்றுள்ளனர். 64 கலசங்கள் வைக்கப்பட்டு முதல் காலயாகசாலை இரவு நடைபெற்றது.
இதையடுத்து ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பீமரதசாந்தி என்றழைக்கப்படும் 70வது திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App