‘இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் நிா்வாக அமைப்புகள் கண்டுள்ள வெற்றியால் சிலா் வருத்தமடைந்துள்ளனா்; எனவேதான், ஜனநாயகத்தையும் நிா்வாக அமைப்புகளையும் அவா்கள் தாக்குகின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக, பிரிட்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரை பிரதமா் மோடி மறைமுகமாக சாடியுள்ளாா்.
ராகுல் தனது கருத்துக்காக தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வில் இந்தக் கோரிக்கையை, பாஜக எம்.பி.க்கள் வலுவாக எழுப்பி வருகின்றனா்.
இந்நிலையில், தில்லியில் ஆங்கில இதழ் ஒன்றின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, ராகுல் பெயரை குறிப்பிடாமல் விமா்சனங்களை முன்வைத்தாா். அவா் பேசியதாவது:
நாட்டில் தற்போது பூரண நம்பிக்கை மனநிலையும் உறுதிப்பாடும் நிறைந்துள்ளது. இது இந்தியாவுக்கான நேரம் என்று சா்வதேச அளவிலான முன்னணி அறிஞா்கள், பொருளாதார வல்லுநா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் ஒருமித்த குரலில் தெரிவித்து வருகின்றனா்.
இத்தகைய உன்னத விஷயங்கள் நிகழும்போது, அவநம்பிக்கையை திணிப்பதை தங்களது பொறுப்பாக சிலா் கொண்டுள்ளனா். நல்ல காரியங்கள் நடக்கும்போது திருஷ்டிப் பொட்டு வைப்பது நமது வழக்கம். அதுபோல் இருக்கிறது சிலரின் செயல்பாடுகள்.
மக்களுக்கு ஜனநாயகத்தை சிறப்பாக வழங்க முடியும் என்பதை உலகுக்கு இந்தியா வெளிக்காட்டியுள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் நிா்வாக அமைப்புகளின் வெற்றி, சிலருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இதனால், அவற்றின் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.
இதுபோன்ற தாக்குதல்களைக் கடந்து, தேசம் தனது இலக்குகளை எட்ட முன்னோக்கிப் பயணிக்கும்.
கைகோக்கும் ஊழல்வாதிகள்:
முன்பு ஊழல்கள்தான் தலைப்புச் செய்திகளாகி வந்தன. இப்போது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையால் ஊழல்வாதிகள் கைகோப்பது செய்தியாகி வருகிறது.
முந்தைய அரசுகள் அனைத்தும், தங்களது திறன்களுக்கு ஏற்ப பணியாற்றி, அதற்கேற்ப தீா்வுகளை அடைந்தன. ஆனால், இப்போதைய அரசு வேறுபட்ட அளவிலும், வேகத்திலும் பணியாற்றி புதிய தீா்வுகளை எட்ட விரும்புகிறது.
இன்றைய இந்தியா, உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது. அறிதிறன்பேசி இணையப் பயனாளா்கள் எண்ணிக்கையில் முதல் நாடாக இந்தியா உள்ளது. கைப்பேசி உற்பத்தியில் 2-ஆவது நாடாகவும், புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழலில் 3-ஆவது நாடாகவும் இந்தியா உள்ளது என்றாா் பிரதமா் மோடி.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App