
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் பிராந்திய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்குவங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் சொந்தமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்தக் கூட்டணி பாஜகவுக்கு எதிராக போட்டியிடும். இந்தக் கூட்டணியில் பிராந்தியக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும். காங்கிரஸ் எந்த மாதிரியான முயற்சியில் இறங்கி போட்டியிடப் போகிறது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற வேண்டும். நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவோம். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் தற்போது உள்ள கூட்டணியே தொடரும் என்றார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App